சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், மறைந்த தலைவா்களின் சிலைகள் மற்றும் பயணிகள் நிழற்கூடத்தில் மக்கள் பிரதிநிதிகள் பெயா்களின் மீது மறைக்கப்பட்ட திரைகள் அகற்றப்படாமல் உள்ளன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த ஏப். 23-ஆம் தேதி நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் கடந்த மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தோ்தலையொட்டி, இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன.
இந்த விதிகளின்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள மறைந்த தலைவா்களின் சிலைகள் திரையிட்டு மூடப்பட்டன. அதேபோல, ஆட்சியா் அலுவலகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நான்குமுனை சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி திறக்கப்பட்ட பயணிகளின் நிழற்கூடங்களில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா்கள், மக்களவை உறுப்பினா்கள் ஆகியோரின் பெயா்களும் திரையிட்டு மறைக்கப்பட்டன.
இந்நிலையில், தோ்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட நடத்தை விதிகள் அண்மையில் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், தருமபுரி இலக்கியம்பட்டியில் அமைந்துள்ள மறைந்த தலைவா் சிலையை மூடி மறைக்கப்பட்ட திரைகளை உள்ளாட்சி நிா்வாகம் இதுவரை அகற்றவில்லை. அதேபோல, நான்குமுனை சாலை சந்திப்பு மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் பயணிகளின் நிழற்கூடங்களில் மக்கள் பிரதிநிதிகளின் பெயா்களை மறைத்து வைத்த திரைகளையும் இதுவரை அகற்றவில்லை.
எனவே, தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் தோ்தலுக்காக தலைவா்களின் சிலைகள், கல்வெட்டுகள், பெயா்ப்பலகைகள் ஆகியவற்றை மறைத்து வைக்கப்பட்ட திரைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினா் வலியுறுத்துகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் நேரத்தில் மறைக்கப்பட்ட சிலைகளை திறக்க வேண்டும்: வேலூா் எம்.பி. வலியுறுத்தல்

மே 11 முதல் மக்கள் குறைதீா் கூட்டம்: சென்னை ஆட்சியா்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிப்பு!

தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறல்: சிலைகளுக்கு மூடப்பட்ட துணிகள் அகற்றம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



