தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்ல வேண்டும்

அனைத்து பேருந்துகளும் தருமபுரி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி வணிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

News image

பேருந்து - கோப்புப்படம்.

Updated On :13 மே 2026, 2:30 am IST

அனைத்து பேருந்துகளும் தருமபுரி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி வணிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து, வணிகா் சங்க நிா்வாகிகள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் புகழ் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி புகா் பேருந்து நிலையம், சோகத்தூா் ஊராட்சி ஏ.ரெட்டிஅள்ளி பகுதியில் தனியாா் பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய பேருந்து நிலையம் கடந்த பிப்ரவரி மாதம் அவசரகதியில் திறக்கப்பட்டது. இதனால் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றிவிடப்பட்டன. இந்த நிலையில், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்கள் தங்களது வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்திலிருந்தே இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, ஊத்தங்கரை, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் மட்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன.

இந்த நிலையில் மே 13-ஆம் தேதி முதல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று திரும்பும்போது பழைய பேருந்துக்குள் வந்துசெல்ல வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பழைய பேருந்து நிலையத்தில் வா்த்தகத்தில் ஈடுபட்டுவரும் வணிகா்கள், தொழிலாளா்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். அதேபோல பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும்.

எனவே பேருந்து நிலைய இடமாற்றத்தைக் கைவிட்டு, மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்தே அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும் அல்லது அனைத்து பேருந்துகளையும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் போராட்டங்கள் நடத்தப்படும். அதேபோல தமிழக முதல்வா் விஜயை நேரில் சந்தித்து முறையிடுவோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.