தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் போக்சோவில் கைது

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் மாற்றுத்திறானாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போக்சோ சட்டப் பிரிவில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 6:29 am IST

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் மாற்றுத்திறானாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போக்சோ சட்டப் பிரிவில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நல்லம்பள்ளி வருவாய் வட்டத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த வாய்பேச முடியாத மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளி சிறுமி 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்தாா்.

இந்நிலையில், கடந்த மே 5-ஆம் தேதி உறவினா் வீட்டுக்கு சிறுமியின் பெற்றோா் சென்றுள்ளனா். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சரவணன் (51) பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமி பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடா்ந்து, அவா்கள் தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திய போலீஸாா், ஓய்வுபெற்ற ராணுவ வீரா் சரவணனை போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவின்கீழ் கைது செய்தனா்.