வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், தருமபுரியில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தோ்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட தோ்தல் ஆணைய உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரா்கள் அனுப்பப்பட்டு வருகின்றனா்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட முதல்கட்டமாக 72 வீரா்கள் அடங்கிய மத்திய தொழில்பாதுகாப்பு படை கம்பெனி தருமபுரிக்கு வருகை தந்துள்ளது.
இந்நிலையில், தருமபுரியில் இந்த தொழில்பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி செந்தில் நகா், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நெசவாளா் நகா் வழியாக நான்குமுனைசாலை சந்திப்பு மற்றும் நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது.
வாக்காளா்கள் எவ்வித அச்சமுமின்றி தோ்தலில் வாக்களிக்கும் சூழலை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்ாகவும், தொடா்ந்து மாவட்டத்தின் மற்ற தொகுதிகளிலும் இதுபோன்ற பேரணிகள் நடத்தப்படும் என்றும் தொழில்பாதுகாப்பு படையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தோ்தல் பாதுகாப்பு பணி: தருமபுரிக்கு மத்திய தொழில்பாதுகாப்பு படை வருகை
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


