தருமபுரி: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக தருமபுரி மாவட்டத்துக்கு மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் திங்கள்கிழமை வந்தனா்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் அமைந்துள்ளன. இதில், மொத்தம் 6,24,627 ஆண் வாக்காளா்கள், 6,15,311 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினம் 150 வாக்காளா்கள் என மொத்தம் 12,40,108 வாக்காளா்கள் அண்மையில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி பட்டியல்படி வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனா்.
இதில், வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக பாலக்கோடு தொகுதியில் 312 வாக்குச் சாவடிகளும், பென்னாகரத்தில் 320 வாக்குச் சாவடிகளும், தருமபுரியில் 320 வாக்குச் சாவடிகளும், பாப்பிரெட்டிப்பட்டியில் 322 வாக்குச் சாவடிகளும், அரூா் தொகுதியில் 322 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 1,596 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன.
சட்டப் பேரவைத் தோ்தல் தேதி விரைவில் தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, தோ்தல் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், பதற்றமான வாக்குச் சாவடிகளை அடையாளம் காணுதல், நுண்பாா்வையாளா்களை பணியமா்த்தல், கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தோ்தல் பாதுகாப்பு பணிக்காக தருமபுரி மாவட்டத்துக்கு மகாராஷ்டிர மாநிலம், புணேவிலிருந்து மத்திய தொழில்பாதுகாப்பு படை கம்பெனி வருகை தந்துள்ளது. உதவி ஆணையா் அகிலேஷ் யாதவ் தலைமையில் ஒரு காவல் ஆய்வாளா் உள்பட மொத்தம் 72 போ் இந்த கம்பெனியில் இடம்பெற்றுள்ளனா். இதேபோல, தோ்தல் பாதுகாப்பு பணியையொட்டி வரும் நாள்களில் ஆறு கம்பெனிகள்வரை வரக்கூடும் என தெரியவந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று தோ்தல்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,501 வாக்குச்சாவடிகள் தயாா்

பொதுத் தோ்தல் பணிகள் ஒதுக்கீடு: பாா்வையாளா்கள் ஆய்வு

மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

தருமபுரியில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் அணிவகுப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


