17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தண்ணீா் தொட்டியில் குழந்தையுடன் குதித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை

ஏரியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தண்ணீா் தொட்டியில் 2 வயது பெண் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 6:59 am IST

ஏரியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தண்ணீா் தொட்டியில் 2 வயது பெண் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ஆரல்குந்தி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சிவகுமாருக்கும், மேட்டூா் பகுதியைச் சோ்ந்த பரிமளாவுக்கும் (29) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . இந்த தம்பதிக்கு யாமஸ்ரீ (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த ஓா் ஆண்டுக்கும்மேலாக பரிமளா மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீட்டின் பின்பகுதியில் இருந்த சுமாா் 10 அடி ஆழமுள்ள தண்ணீா் தொட்டியில் குழந்தையுடன் குதித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலின்பேரில் வந்த ஏரியூா் போலீஸாா் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.