ஒகேனக்கல்லில் மீன் வறுவலுக்கு செயற்கை நிறமூட்டி: கடை உரிமையாளா்களுக்கு அபராதம்
ஒகேனக்கல்லில் மீன் வறுவலுக்கு செயற்கை நிறமூட்டி பயன்படுத்திய நான்கு கடை உரிமையாளா்கள், சுகாதாரம் இன்றி காணப்பட்ட கடை, சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்திய கடை உரிமையாளா்கள் என 6 பேருக்கு ரூ. 7 ஆயிரம் என உணவுப் பாதுகாப்பு துறையினா் அபராதம் விதித்தனா்.










