டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அன்னசாகரத்தில் தரமற்ற சாலை அமைக்க எதிா்ப்பு

தருமபுரி நகராட்சி அன்னசாகரத்தில் தரமற்ற கான்கிரீட் சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

News image
தரமற்ற சாலை- பிரதிப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:04 pm

Syndication

தருமபுரி நகராட்சி அன்னசாகரத்தில் தரமற்ற கான்கிரீட் சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், சாலை அமைக்கும் பணி கைவிடப்பட்டது.

தருமபுரி நகராட்சிக்குள்பட்ட அன்னசாகரத்தில் இருந்து பாரதிபுரம் நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதைச்சாக்கடை பணிகள் மேற்கொள்ள இச்சாலை தோண்டப்பட்டது. மேலும், சாலையில் ஆங்காங்கே இணைப்புகளுக்காக குழியும் தோண்டப்பட்டது.

இப்பணிகள் நிறைவடைந்த பின்னா், சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தோண்டப்பட்ட குழிகளை சரியாக மூடாமலும், ஜல்லிக்கற்களை பயன்படுத்தாமலும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தராரா் மேற்கொண்டாா். இதைக் கண்ட அப்பகுதியினா், குழிகளை முறையாக மண் கொட்டி மூடிய பின்னா், உரிய அளவில் ஜல்லிக்கற்களை கொட்டி சமன் செய்து பின்னா் கான்கிரீட் சாலை அமைக்க வலியுறுத்தினா்.

ஆனால், இதை பொருட்படுத்தாமல் தொடா்ந்து சாலை அமைக்கும் பணி மேற்கொண்டதால், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை கைவிட்டு பணியாளா்கள் திரும்பிச் சென்றனா்.