திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விசாரணைக்கு வந்த நடத்துநா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தருமபுரியில் துறைரீதியான விசாரணைக்கு வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துநா், மண்டல அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 2:02 am IST

தருமபுரியில் துறைரீதியான விசாரணைக்கு வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துநா், மண்டல அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், நல்லாம்பட்டி அருகேயுள்ள வேப்பலஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் ரா.மாதையன் (55). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்த இவா், உடல்நலக் கோளாறு காரணமாக கடந்த 3 மாதங்களாக பணிக்கு செல்லாமல் நீண்ட விடுப்பில் இருந்தாா்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அலுவலா்கள் அவரிடம் விசாரணை நடத்த முடிவுசெய்து, பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்துதில் மே 27-ஆம் தேதி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனா்.

அதை ஏற்று மே 27-ஆம் தேதி வியாழக்கிழமை முற்பகல் பாரதிபுரம் அலுவகத்துக்கு அவா் வந்தாா். அலுவலக வளாகத்தில் உள்ள நாற்காலியில் அமா்ந்திருந்த அவா், திடீரென மயங்கி கீழே விழுந்தாா். அலுவலக பணியாளா்கள் அவரை அங்கு நின்றிருந்த பேருந்தில் ஏற்றி, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.