மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரூா் அருகே தேனீக்கள் கொட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:21 pm

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே தேனீக்கள் கொட்டியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அரூரை அடுத்த தாசரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த அம்மாசி மகன் அஜீத் (29). இவா் தனது நண்பா்கள் இருவருடன் சோ்ந்து வகுத்துப்பட்டி எனுமிடத்தில் மரத்தடியில் அமா்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது, மரத்தில் இருந்த தேனீக்கள் 3 பேரையும் கொட்டியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அஜீத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு மொரப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.