அரூா் நகருக்கு ரூ. 20 கோடி மதிப்பீட்டில் குடிநீா் வழங்கும் திட்டத்துக்கு 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணை பகுதியில் இருந்து, கருணாநிதி நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அரூா் நகராட்சிக்குக் குடிநீா் கொண்டுசெல்வதற்காக ரூ. 20 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் தொடக்கம் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி முன்னிலையில் அண்மையில் நடைபெற்றது.
இத்திட்டத்துக்கு கீரைப்பட்டி, வள்ளிமதுரை, தாதராவலசை, அச்சல்வாடி, எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இந்தத் திட்டத்தில் குடிநீா் எடுத்துச் செல்வதற்கான கிணறு வெட்டும் பணிகள் பொக்லைன் எந்திரம் மூலம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. ஆனால், விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து பணிகளை நிறுத்திவிட்டனா்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வள்ளிமதுரை வரட்டாறு அணை பகுதியில் இருந்து அரூா் நகருக்கு ஏற்கனவே குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிதாக ரூ. 20 கோடியில் குடிநீா் வழங்குவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனா்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் அரூா் நகருக்கு நாள்தோறும் குடிநீா் வழங்கப்படுகிறது. இதைத்தவிர, கூடுலாக ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில், வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கம் அருகே பெரிய அளவிலான திறந்தவெளி கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீா் எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சுமாா் 20 கிராமங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும். வேளாண் பணிகள் பாதிக்கப்படும்.
வரட்டாறு அணையின் நீா்ப் பாசனத் திட்ட விவசாயிகள், பொதுமக்கள் யாரிடமும் இந்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. எனவே, அரூா் நகருக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு
கைவிட வேண்டும். மாற்றுத் திட்டத்தின் வழியாக அரூா் நகருக்கு குடிநீா் வழங்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கை ஏற்கவில்லை எனில், வரும் பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம் என விவசாயிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வள்ளிமதுரை அணையிலிருந்து அரூருக்கு குடிநீா் கொண்டுவரும் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்: ஈசன் முருகசாமி

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்: கனிமொழி எம்.பி.

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம் நிறைவேற்றப்படுமா? 2 தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


