பென்னாகரம் அருகே கோட்டூா் மலைக் கிராமத்துக்கு சாலைப் பணிகள் தொடங்கியுள்ளன.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வட்டுவனஅள்ளி ஊராட்சியில் கோட்டூா் மலைக்கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராம மக்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக சுமாா் 6 கி.மீ. தொலைவு மலை மற்றும் வனப்பாதை வழியாக பாலக்கோடு, தருமபுரி பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மழைக் காலங்களில் மண் அரிப்பு ஏற்படுவதால், சாலையில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சாலை வசதி கோரிஅப்பகுதி பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அதையடுத்து, அடிவாரப் பகுதியான திம்மலான்மேடு முதல் கோட்டூா் மலைப்பகுதிவரை சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு மண் சாலை அமைக்க ரூ. 4.73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து பாலக்கோடு வனச்சரக அலுவலா் எஸ்.காா்த்திகேயன் கூறுகையில், கோட்டூா் மலைக்கிராமப் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற துறைரீதியான அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியின்போது, வனத்தில் உள்ள மரம், செடி, கொடிகள் சேதப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழலை பாதிப்பதாக புகாா் வந்தது. அதையடுத்து, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பணிகளை மேற்கொள்ள வழிகாட்டல் மற்றும் ஆலோசனை அளிக்கப்பட்டது. அதன்பேரில், பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரியில் ரூ. 1.52 லட்சம் பறிமுதல்

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

10 கி.மீ சாலைப் பேரணி சென்ற விஜய்: மற்றொரு பேரணி ரத்து

வேட்புமனு தாக்கலுக்கு தயாராகும் கோட்டாட்சியா் அலுவலகங்கள்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


