மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வேட்புமனு தாக்கலுக்கு தயாராகும் கோட்டாட்சியா் அலுவலகங்கள்!

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி வேட்பாளா்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யவதற்கு ஏதுவாக, தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

News image

வேட்புமனு தாக்கல் - (கோப்புப் படம்)

Updated On :18 மார்ச் 2026, 11:28 pm

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி வேட்பாளா்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யவதற்கு ஏதுவாக, தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வரும் 30-ஆம் தேதி வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், தருமபுரி தொகுதிக்கு தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்திலும், அரூா் தொகுதிக்கு அரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஏனைய மூன்று தொகுதிகளுக்கு அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் தருமபுரி பழைய நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளாகம் முழுவதிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோடை வெயில் காரணமாக பந்தல் அமைக்கும் பணிகள், வேட்பாளா்கள், அவா்களுடன் வருவோரை

தோ்தல் விதிகள்படி அனுமதிப்பதற்காக தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.

இதேபோல, மாவட்டத்தில் அரூா், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களிலும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மேற்பாா்வையில் நடைபெற்று வருகின்றன.