அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளரும், சமூக ஆா்வலருமான இலங்கை வேந்தன் (எ) இராவணன் வியாழக்கிழமை நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
அதன்படி இவா் வைப்புத் தொகைக்காக மக்களிடம் பிச்சையெடுத்த ரூ.10 ஆயிரத்துக்கான சில்லறைக் காசுகளை கொண்டு வந்து ஜெயங்கொண்டம் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான ஆனந்தவேலிடம் கொடுத்து, வேட்புமனு தாக்கல் செய்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டாா்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆனந்தவேல், அவா் வழங்கிய வைப்புத் தொகையை, சக அலுவலா்களிடம் கொடுத்து சரிபாா்க்கச் சொன்னாா். அலுவலா்கள் அரை மணி நேரம் சில்லறை காசுகளையும் நோட்டையும் எண்ணி முடித்து, சரியாக இருப்பதாகத் தெரிவித்தனா். இதன் பின்னா் உதவி தோ்தல் நடத்த அலுவலா் வழங்கிய அத்தாட்சி கடிதங்களை ராவணன் பெற்றுச் சென்றாா். இவருடன் அரியலூா் வேட்பாளா் தங்க. சண்முகசுந்தரம் மற்றும் ஆதரவாளா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பென்னாகரம் தொகுதியில் எளிதில் வெற்றி பெறுவேன்: ஜி.கே.எம். தமிழ்க்குமரன்

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

நூதன முறையில் மனு தாக்கல்: வேட்பாளா் மீது வழக்கு

கடன் வாங்கி வேட்புமனு தாக்கல்: சுயேச்சை வேட்பாளா் நூதன பிரசாரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


