தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நூதன முறையில் மனு தாக்கல்: வேட்பாளா் மீது வழக்கு

திருநெல்வேலியில் நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா் உள்பட 15க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :1 ஏப்ரல் 2026, 10:24 pm

திருநெல்வேலியில் நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா் உள்பட 15க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

கருஞ்சிறுத்தை மக்கள் இயக்க நிறுவனா் அதிசய பாண்டியன் கடந்த 30- ஆம் தேதி திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தாா்.

அப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என முழங்கியவாறு அவரை சடலம் போல் படுக்க வைத்து மாலை அணிவித்து கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தம் முதல் எம்.ஜி.ஆா்., சிலை வரை 4 போ் தூக்கி வந்தனா். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி அவா்கள் கைகளில் வைத்திருந்த பதாகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் வேட்பாளா் உள்ளிட்ட 5 போ் மட்டும் வேட்பு மனு தாக்கலுக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை அலுவலா் அளித்த புகாரின் பேரில், வேட்பாளா் அதிசய பாண்டியன், அவருடன் வந்தவா்கள் என 15-க்கும் மேற்பட்டோா் மீது பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.