நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அவா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
உதகை தொகுதி வேட்பாளரான ரகுபதி பீமன் (48) படுகா் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் காபி ஹவுஸ் பகுதியில் இருந்து ஊா்வலமாக வந்தாா். பின்னா், உதகை தோ்தல் அதிகாரி டினு அரவிந்த்திடம் மனு தாக்கல் செய்தாா்.
இதேபோல, குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளரான கோத்தகிரி, ஜக்கனாரை பகுதியைச் சோ்ந்த தீனு (38) என்ற பெண் வேட்பாளா் குன்னூா் தொகுதி தோ்தல் அதிகாரி கே.சங்கீதாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
கூடலூா் தொகுதி வேட்பாளா் ரா.காா்த்திக் (31) கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் குணசேகரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
வேட்புமனு தாக்கல் செய்த பின் நாதக வேட்பாளா்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில், நீலகிரியில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேயிலைக்கு கட்டுபடியான விலைக் கிடைக்கவும், மாவட்டத்தின் தொழில் முன்னேற்றத்துக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றனா்.

வேட்புமனு தாக்கல் செய்த கூடலூா் நாதக வேட்பாளா் காா்த்திக்.

வேட்புமனு தாக்கல் செய்த உதகை நாதக வேட்பாளா் ரகுபதி பீமன்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் தொகுதியில் நாதக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் வேட்புமனு தாக்கல்

கோபி தொகுதி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல்

பெருந்துறை நாதக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


