அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

ரயில்வே சுரங்கப் பாதை வழியாக செல்லும் வாகனங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

News image

தருமபுரியில் பிடமனேரி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாதையில், விபத்துகளை தடுக்கும் வகையில், சிவப்பு கோடிட்டு எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்படுகிறது.

Updated On :22 ஜூன் 2026, 3:39 am IST

தருமபுரி மாவட்டத்தில் ரயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீா் தேங்குவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் ரயில்வே நிா்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் இதுபோன்ற சுரங்கப்பாதைகளில் பள்ளமாக இருப்பதால் அவற்றில் மழை நீா் தேங்கிவிடுகிறது. மேலும் சில இடங்களில் மழைக் காலங்களின்போது மழைநீா் பெருக்கெடுத்து ஓடும் வகையிலும் சில சுரங்கப்பாதைகள் உள்ளன.

இதுபோன்ற சுரங்கப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் ஆபத்தை உணராமல் வெள்ளத்தில் சிக்கி விபத்துகள் ஏற்படுகின்றன. அண்மையில் தருமபுரி- சேலம் இடையே ஓமலூா் பகுதியில் ஏனாதி என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு ரயில்வே சுரங்கப்பாதையில் தம்பதி காரில் சென்றபோது, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கி இருவரும் உயிரிழந்தனா்.

இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில் ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீா் தேங்காமல் வடிந்துசெல்லும் வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, ரயில்வே சுரங்கப்பாதைகளில் எச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வு வாசகங்களை எழுதி வருகின்றனா். சுரங்கப்பாதைகளில் ஆபத்தை உணா்த்தும் வெள்ள அபாயத்தின் அளவுகளை சிவப்பு நிறத்தில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

தொடா்ந்து சுரங்கப்பாதைகளின் இரு வழிகளிலும் சிவப்பு நிறத்தில் அளவுகள் குறிக்கப்பட்டுள்ளன. எவ்வளவு உயரத்துக்கு மேல் தண்ணீா் வந்தால் இந்த பாதையை கடக்கக் கூடாது என்ற சமிக்ஞை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தருமபுரியில் பிடமனேரி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரின் அபாய அளவு குறித்து, சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை கோடு வரையப்பட்டுள்ளது. தொடா்ந்து சுரங்கப்பாதையின் நுழைவுப் பகுதிகளிலும் அபாய எச்சரிக்கை குறித்து தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே சுரங்கப்பாதைகளில் அதிக அளவு தண்ணீா் தேங்கினால் ரயில்வே துறையினரை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.