அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

பாலக்கோடு அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

News image

பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து.

Updated On :7 ஜூலை 2026, 2:25 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.

கன்னியாகுமரியில் இருந்து கா்நாடக மாநிலம், பெங்களூரு நோக்கி சுமாா் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. பாலக்கோடு அருகே மணியக்காரன்கொட்டாய் பகுதியில் தருமபுரி - நெரலூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, தீடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது.

இதில், பேருந்து ஓட்டுநா் வினோத் படுகாயமடைந்தாா். பயணிகள் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள், காவல் துறையினா் ஓட்டுநா் உள்ளிட்ட காயமடைந்தவா்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து காரணமாக, தருமபுரி - நெரலூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடா்பாக பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.