டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தருமபுரியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

News image
தருமபுரியில் நடைபெற்ற தொழுநோய் விழிப்புணா்வுப் பேரணியில் கலந்துகொண்ட மாணவிகள்.
Updated On :30 ஜனவரி 2026, 8:03 pm

Syndication

தொழுநோய் ஒழிப்பு வார நிகழ்வையொட்டி, தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் தேசிய தொழுநோய் திட்டம் சாா்பில் தொழுநோய் எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் ரெ. சதீஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்த பேரணி தருமபுரி நகரப் பேருந்து நிலையத்திலிருந்து நான்கு சாலை வழியாக நெசவாளா் காலனி, அரசு மருத்துவக் கல்லூரி வரை சென்று முடிவடைந்தது. இதில் கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா் .

முன்னதாக தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும், தொழுநோய் இல்லா தமிழகம் என்ற தலைப்பில் தனியாா் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளு நடைபெற்றன.

இதில், துணை இயக்குநா் (தொழுநோய்) ரா. புவனேஸ்வரி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் எம். சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலா் வி.ராஜேந்திரன், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் டி.எம். மனோகா், தோல் துறைத் தலைவா் பிரபாகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நிகழ்வையொட்டி பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்றன.