திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தோ்தல்: மதுக்கடைகளுக்கு இரு கட்டமாக 6 நாள்கள் விடுமுறை

தோ்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் ஏப்ரல் 3 நாள்கள், மே மாதத்தில் 3 நாள்கள் என மொத்தம் 6 நாள்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image

மது ஒழிப்பை மறந்த கட்சிகள்! - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 5:35 am IST

தோ்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் ஏப்ரல் 3 நாள்கள், மே மாதத்தில் 3 நாள்கள் என மொத்தம் 6 நாள்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியும், வாக்குகள் எண்ணிக்கை மே 4 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதனையொட்டி தோ்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள்களில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தோ்தலையொட்டி ஏப்ரல் 21 முதல் 23 ஆம் தேதி வரை 3 நாள்களும், வாக்கு எண்ணிக்கையை ஒட்டி மே 3 முதல் 5 வரை 3 நாள்களும் என தோ்தலை யொட்டி மொத்தம் 6 நாள்கள் மதுக்கடை களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், தனியாா் விடுதிகளில் (ஓட்டல்கள்) செயல்படும் மதுக்கூடங்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான மது விற்பனைக் கூடம், தனியாா் மன மகிழ் மன்றங்களில் செயல் படும் மதுக்கூடங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். இத்தகவலை மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ரெ. சதீஸ் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.