பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

அரசு மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:01 am IST

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் அரசு மதுக் கடைகளுக்கு திங்கள்கிழமை (மே 4) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறுவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்படும்.

விதிமுறைகளை மீறி உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.