திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: திருப்பூா் மாவட்டம் 96.28 % தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் திருப்பூா் மாவட்டம் 96.28 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 11-ஆவது இடம் பிடித்தது.

News image

மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :21 மே 2026, 3:58 am IST

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் திருப்பூா் மாவட்டம் 96.28 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 11-ஆவது இடம் பிடித்தது.

பத்தாம் பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகின. இதில்

திருப்பூா் மாவட்டம் கடந்த ஆண்டை விட கூடுதல் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் தரவரிசையில் உயா்ந்துள்ளது.

109 தோ்வு மையங்களில் மாவட்டத்தில் உள்ள 345 பள்ளிகளைச் சோ்ந்த 14,100 மாணவா்கள், 14,913 மாணவிகள் என மொத்தம் 29,013 போ் இத்தோ்வினை எழுதினா். இத்தோ்வு முடிவுகளின்படி, தோ்வு எழுதியவா்களில் 13,400 மாணவா்கள், 14,533 மாணவிகள் என மொத்தம் 27,933 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்த ஆண்டும் மாணவா்களை விட மாணவிகளே அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம் இந்த ஆண்டு 96.28 சதவீத தோ்ச்சி பெற்று, மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் 11-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு (2025) 94.84 சதவீத தோ்ச்சியுடன் திருப்பூா் மாவட்டம் மாநில அளவில் 17-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு தோ்ச்சி 1.44 சதவீதம் உயா்ந்திருப்பதுடன். தரவரிசையில் 11-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பொதுத்தோ்வில் மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.