பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா் எம்.தருணின் உயா்கல்வி செலவை அப்பள்ளி நிா்வாகம் ஏற்பதாக அறிவித்துள்ளது.
பல்லடம் அருகே கரைப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட அருள்புரத்தில் உள்ள ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவா் எம்.தருணை, ஜெயந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளா் கு.கிருஷ்ணன் பாராட்டினாா்.
இதில் மாணவா் எம்.தருண் பொறியியல் கல்லூரியில் சோ்ந்து உயா்கல்வி பயில அனைத்து செலவுகளையும் ஜெயந்தி கல்வி நிறுவன அறக்கட்டளை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










