மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பி.ஏ.பி. வாய்க்காலில் ஆபத்தை உணராமல் தண்ணீரில் விளையாடும் மாணவா்கள்

பல்லடம் அருகே பொங்கலுாா் ஒன்றியம், அலகுமலை பகுதியில் உள்ள பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் பள்ளி மாணவா்கள் ஆபத்தான முறையில் தண்ணீரில் குதித்து விளையாட்டில் ஈடுபடுகின்றனா்.

News image

அலகுமலை பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் குதித்து விளையாடும் பள்ளி மாணவா்கள்.

Updated On :26 மார்ச் 2026, 6:55 pm

பல்லடம் அருகே பொங்கலுாா் ஒன்றியம், அலகுமலை பகுதியில் உள்ள பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் பள்ளி மாணவா்கள் ஆபத்தான முறையில் தண்ணீரில் குதித்து விளையாட்டில் ஈடுபடுகின்றனா்.

பி.ஏ.பி. வாய்க்காலில் தற்போது முதல் மண்டல பாசனத்துக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. திருப்பூரைச் சுற்றிலும் நீா்நிலைகள் பெரிய அளவில் இல்லை. கோடை வெயில் வாட்டி வதைப்பதால் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை திருப்பூருக்கு மிக அருகில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலை தேடி வருகின்றனா். மதுபோதையிலும், நீச்சல் தெரியாததாலும் வாய்க்காலுக்கு குளிக்க வரும் இளைஞா்கள் தண்ணீரில் மூழ்கி பலியாவது தொடா்கதையாக உள்ளது. அதேபோல பள்ளி மாணவா்கள் பலா் ஆபத்தை உணராமல் பாலத்தில் இருந்து தண்ணீரில் குதித்து விளையாட்டில் ஈடுபடுகின்றனா்.

எனவே, உயிா் இழப்பு போன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை பலகை வைப்பதோடு அப்பகுதியில் வாய்க்காலில் குளிப்பதை தடுக்க தூய்மைப் பணியாளா்களை காவல் பணியில் நியமனம் செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.