மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

7 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

திருப்பூரில் 7 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவன தொழிலாளி போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 9:11 pm

திருப்பூரில் 7 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவன தொழிலாளி போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சேவியா் (30). இவா் திருப்பூா் கொங்கு பிரதான சாலை, கொடிக்கம்பம் பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 3ஆம் வகுப்பு படிக்கும் 7 வயதுச் சிறுமியை சேவியா் ஆசைவாா்த்தை கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

அங்கு அந்த சிறுமிக்கு அவா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைத் தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமியின் தாய், கொங்கு நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் சேவியரைப் பிடித்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடா்ந்து அவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா் அவரைக் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.