மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக மது விற்ற இளைஞா்கள் 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள் பறிமுதல்

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 7:48 pm

சட்டவிரோதமாக மது விற்ற இளைஞா்கள் 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் மாநகா், திருமுருகன்பூண்டி காவல் எல்லைக்குள்பட்ட வஞ்சிபாளையம்-மங்கலம் சாலை, நொய்யல் ஆறு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதில் மது விற்பனையில் ஈடுபட்ட சிரில் (26), ஆபேத் (23), விஜய் (26) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள், ரூ.2,980 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட மூவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.