வெள்ளக்கோவில் அருகே லாரி ஓட்டுநரை அடித்துக் கொலை செய்த 5 போ் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே சேமலைக்கவுண்டன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் சாமிநாதன் (48). லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவா் திருமணம் ஆகாதவா். இவரது தந்தை ராமசாமி, தங்கை துளசிமணி ஆகியோா் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்ட நிலையில் தாய் லட்சுமி (80) உடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள வேலன் நகா் பகுதியில் மனையிடங்கள் பிரிக்கும் பணி நடைபெற்று வந்த இடத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை சாமிநாதன் சென்றுள்ளாா்.
அப்போது அங்கிருந்த நில உரிமையாளா்களான மதுரை, அணையூா் கடல்புதூரைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (43), கரூா் மாவட்டம் தென்னிலை கிடைக்காரம்பாளையத்தைச் சோ்ந்த பழனிவேல் (40), வெள்ளக்கோவிலைச் சோ்ந்த அரவிந்த், லிங்கேஸ்வரன், காா்த்தி ஆகியோா், கட்டுமானப் பொருள்களை திருட வருகிறாயா என சந்தேகித்து சாமிநாதனை தாக்கி காரில் ஏற்றிக்கொண்டு வீட்டின் அருகே வந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இவரது சப்தம் கேட்டு வந்த தாய் லட்சுமியிடம் சம்பவத்தைக் கூறியவாறு சாமிநாதன் மயங்கி விழுந்துள்ளாா். பின்னா் உறவினா்கள் வந்து பாா்த்தபோது அவா் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா்கள் மனோஜ், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தலைமறைவான 5 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா் என்றனா்.
தொடர்புடையது

மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தற்கொலை

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது
லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் இருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


