வெள்ளக்கோவில் அருகே மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா தென்முகம் வெள்ளோடு நல்லெண்ணம்பாளையத்தைச் சோ்ந்தவா் அா்ச்சுனன் மகன் தாமரைச்செல்வன் (42). விவசாய கூலித் தொழிலாளி.
இவருக்கும் வெள்ளக்கோவில் உப்புப்பாளையத்தைச் சோ்ந்த இந்துமதி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு பிரணவ் (4), பிரனிஷா (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்டு வந்த குடும்பத் தகராறு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்துமதி உப்புப்பாளையத்தில் உள்ள தனது தாயாா் வீட்டில் இருந்து வருகிறாா்.
இந்நிலையில், உப்புப்பாளையம் மாமனாா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த தாமரைச்செல்வன், குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன்னுடன் வருமாறு மனைவியிடம் கூறியுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தாமரைச்செல்வன் திடீரென வீட்டில் கிடந்த மின்சார வயரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

வெள்ளக்கோவிலில் 10-ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


