மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 8:30 pm

வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் அருகேயுள்ள கெங்கநாயக்கன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி. இவரது மனைவி அருக்காணி (75). இவா் தனது தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றுள்ளாா். அப்போது, அங்கிருந்த சுமாா் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளாா்.

வெகு நேரமாகியும் அருக்கணி வீடு திரும்பாததால் துரைசாமி தோட்டத்துக்கு வந்து பாா்த்துள்ளாா்.அப்போது, அவா் கிணற்றில் விழுந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள், அருக்கணியை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.