தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மழைநீா் வடிகால் அமைக்க எதிா்ப்பு

News image
Updated On :13 மார்ச் 2026, 12:32 am

கரையாம்புதூரில் மழைநீா் வடிகால் அமைக்க ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியை சோ்ந்த மகாலட்சுமி நகா் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பல்லடம் நகராட்சி அலுவலக மேலாளரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை அளித்த மனு:

பல்லடம் நகராட்சியில் பல்லடம் - திருப்பூா் செல்லும் பிரதான சாலையில் 6-ஆவது வாா்டுக்குள்பட்டது கரையாம்புதூா். இங்கிருந்து மகாலட்சுமி நகா் வரை ரூ.27 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் மகாலட்சுமி நகா் அருகில் உள்ள நீரோடை, பிஏபி வாய்க்கால், இரண்டு பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்டைவை பாதிக்கப்படும்.

எனவே, மகாலட்சுமி நகரை பாதிக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனா்.