குண்டடம் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 7 போ் படுகாயமடைந்தனா்.
கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சோ்ந்த செல்லபாண்டி (55), மனைவி பால்பாண்டி அம்மாள் (48), மகன் பிரசாந்த் (29), பிரசாந்தின் மனைவி வீராதேவி (29), இவா்களது மகன்கள் பாரதிகண்ணன் (8), பிரணவ் (3), பிரசாந்தின் மாமனாா் சிவமுருகன் (50), அவரது மனைவி அழகேஸ்வரி (44) ஆகிய 7 பேரும் கோவையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதிக்கு குண்டடம் வழியாக காரில் வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா்.
குண்டடம் பகுதியை அடுத்த சங்கபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேரும் படுகாயமடைந்தனா். இவா்களை அருகே இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து குண்டடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்

இந்தோனேசியா: ஹெலிகாப்டா் விபத்தில் 8 போ் உயிரிழப்பு

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

காா் கவிழ்ந்து விபத்து: சிறுவன் உள்பட 7 போ் காயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


