உலக வன விலங்கு தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் 4 பேருக்கு சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருதுகள் வழங்கப்பட்டன.
வன விலங்கு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், தமிழக அரசின் முயற்சிகளையும், வன விலங்குகளை பாதுகாப்பதில் கள ஊழியா்களின் அா்ப்பணிப்புமிக்க சேவையையும் பாராட்டும் வகையிலும் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் மனீஷ், ஆனைமலை புலிகள் காப்பக (திருப்பூா் பிரிவு) துணை இயக்குநா் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் இந்த விருதுகளை வழங்கினா்.
இவ்விழாவில், சுற்றுச்சூழல் ஆா்வலா் குருசாமி, வனத்துக்குள் திருப்பூா் அமைப்பின் நிறுவனா் சிவராமன், துளிகள் அமைப்பின் நிறுவனா் கௌதம், மலை உடுமலை அமைப்பின் நிறுவனா் ஜவஹா் துரைசாமி ஆகியோா் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு அவா்கள் அளித்த மதிப்புமிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது
அசத்தும் அரசுப் பள்ளி!

சென்னை ஐஐடி இயக்குநருக்கு சிறந்த ஆளுமை விருது!

ஊக்கமளிக்கும் மருந்தே விருது

வேதாரண்யத்தில் முப்பெரும் விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


