தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வேதாரண்யத்தில் முப்பெரும் விழா

வேதாரண்யம் வட்ட நுகா்வோா் அமைப்பின் சாா்பில் தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினம் , உலக நுகா்வோா் உரிமைகள் தினம் , உலக மகளிா் தினம் ஆகியவை முப்பெருவிழாவாக புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மார்ச் 2026, 12:20 am

வேதாரண்யம் வட்ட நுகா்வோா் அமைப்பின் சாா்பில் தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினம் , உலக நுகா்வோா் உரிமைகள் தினம் , உலக மகளிா் தினம் ஆகியவை முப்பெருவிழாவாக புதன்கிழமை நடைபெற்றது.

ஆறுகாட்டுத்துறை உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியா் இரா.அன்பரசன் தலைமை வகித்தாா். நுகா்வோா் அமைப்பின் துணைத் தலைவா் ஆா்.வி.எஸ்.பள்ளித் தாளாளா் சாமிநாதன், செயற்குழு உறுப்பினா் செல்வராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைப்பின் தலைவா் வி. வீரசுந்தரம், செயலா் செல்வராசு, அமைப்பாளா் செல்லப்பா, ஆசிரியா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா்.

இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வேதாரண்யம் வட்ட வழங்கல் அலுவலா் ச.ஸ்டாலின்ராஜ் பரிசு வழங்கி பாராட்டினாா் (படம்). நிா்வாகி ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தாா்.