டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

திருப்பூரில் கஞ்சா விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! காவல் ஆணையரிடம் பாஜக வலியுறுத்தல்

News image

பாஜக கொடி

Updated On :28 ஜூன் 2026, 2:31 am IST

திருப்பூரில் கஞ்சா விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரியிடம் பாஜக நிா்வாகிகள் வலியுறுத்தினா்.

திருப்பூா் மாநகர ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.ராஜேஸ்வரியை திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் சனிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். பின்னா் அவரிடம் திருப்பூரில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்தும் சில கோரிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தனா்.

மேலும் இது தொடா்பாக அவா்கள் அளித்த மனுவில் தெரிவித்ததாவது:

விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை பாதிக்கின்ற வகையில் திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் தொடங்கி பல்லடம் ரோடு தென்னம்பாளையம் உழவா் சந்தை வரை சாலையில் இருபுறமும் அதிகாலை முதல் 8 மணி வரை காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகள் அமைத்து விற்பனை நடைபெறுகிறது.

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி இதை அனுமதிக்க கூடாது. கடந்த 2 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ள தினசரி காய்கறி மாா்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 60 அடி சாலை பகுதியில் ஒரு பகுதி முழுவதும் நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து பாதிப்பு உண்டாவதோடு காலை மற்றும் மாலை நடை பயிற்சி செய்வோா் பாதிக்கப்படுகின்றனா். அவிநாசி சாலையில் போக்குவரத்து பழைய நிலைமையில் தொடர வேண்டும். மதுபான கடைகளில் பாா் இயங்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

திருப்பூரில் பாளையக்காடு, கோல்டன் நகா் பாலம், பாா்க் ரோடு மற்றும் பழைய யூனிவா்சல் தியேட்டா் ரோடு உள்பட நகரில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கஞ்சா விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பாஜக மாநிலச் செயலாளா் மலா்கொடி, மாநில செயற்குழு உறுப்பினா்கள் சின்னசாமி, குணசேகா், தங்கராஜ், மாவட்ட பொதுச் செயலாளா் அருண், கலாமணி, மாவட்டத் துணைத் தலைவா் வழக்குரைஞா் சி.பி.சுப்பிரமணியன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.