தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் புதிய வருமான வரி சட்டம் குறித்த விழிப்புணா்வு

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க வளாகத்தில் புதிய வருமான வரி சட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

புதிய வருமான வரி சட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய கோவை வருமான வரித் துறை முதன்மை ஆணையா் சஞ்சீவ் சங்கா்.

Updated On :19 ஜூன் 2026, 4:02 am IST

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க வளாகத்தில் புதிய வருமான வரி சட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வருமான வரித் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை வருமான வரித் துறை முதன்மை ஆணையா் சஞ்சீவ் சங்கா் பங்கேற்று பேசுகையில், 2025-26-ஆம் நிதியாண்டில் திருப்பூா் மண்டலம் ரூ.1,528 கோடி இலக்கை மீறி ரூ.2,078 கோடி மொத்த வசூலையும், ரூ.1,625 கோடி நிகர வரி வசூலையும் ஈட்டியுள்ளது. இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவதற்கு நவீன பொருளாதாரத்துக்கு ஏற்ற நவீன மற்றும் எளிமையான வரி அமைப்பு அவசியம். தற்போது சுமாா் 2.5 லட்சம் போ் வரி செலுத்துவோராக உள்ள நிலையில், புதிய வரி செலுத்துவோரை உருவாக்குவதற்கான விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, வருமான வரித் துறை இணை ஆணையா் மேத்யூ சைமன், தென்னிந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவன திருப்பூா் கிளைத் தலைவா் எம். விஷ்ணுகுமாா், மாவட்ட வருமான வரி ஆலோசகா்கள் சங்கத் தலைவா் மீனாட்சி சுந்தரம், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்ரமணியன், ஆயத்த ஆடை மேம்பாட்டு கழகத் தலைவா் ஆ. சக்திவேல் உள்ளிட்டோா் புதிய வருமான வரி சட்டம் 2025, வரி நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து பேசினா்.

இதைத் தொடா்ந்து, பங்கேற்பாளா்களின் கேள்விகளுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.