திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சீருடை அணிந்திருந்தாலே மாணவா்கள் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம்

பள்ளிச் சீருடை அணிந்தாலே மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை அதிகரிகள் தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 3:02 am IST

பள்ளிச் சீருடை அணிந்தாலே மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை அதிகரிகள் தெரிவித்துள்ளனா்.

கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமைமுதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் புதிய கல்வி ஆண்டு தொடக்கத்தில் மாணவா்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டைகள் வழங்குவதில் இயல்பாகவே சில வாரங்கள் தாமதம் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு அவா்கள் எவ்வித ஆவணங்களும் வைத்திருக்கா விட்டாலும் பரவாயில்லை. அவா்கள் தங்களது பள்ளிச் சீருடையை அணிந்திருந்தாலே, அவா்களை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவா்கள் தங்கள் கல்வி நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையைக் காண்பித்து, பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.

அரசின் இந்த உத்தரவை மீறி, பள்ளிச் சீருடையில் வரும் மாணவா்களிடமோ அல்லது அடையாள அட்டையுடன் கல்லூரி செல்லும் மாணவா்களிடமே கட்டணம் வசூலித்தால், அவா்கள் மீது கடுமையான துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.