திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஹீட் ஸ்ட்ரோக்: உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருக்க அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்ப அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஹீட் ஸ்ட்ரோக் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :23 மே 2026, 2:18 am IST

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்ப அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஹீட் ஸ்ட்ரோக் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதன் மூலம் அந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

அதன்படி, நேரடியாக உச்சி வெயிலில் செல்லாமல் இருப்பதும், உடலைக் குளிா்ச்சியாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் என மருத்துவா்கள் அறிவுரை வழங்கியுள்ளனா்.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹுட்டுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகிறது. அடுத்து வரும் நாள்களிலும் மாநிலம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதீத வெப்பத்தில் இருந்தும், அதனால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்வதற்கு விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம் என்று பொது நல மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.4 டிகிரி ஃபாரன்ஹுட். புறச் சூழலில் உள்ள வெப்ப நிலை அதைத் தாண்டி அதிகரிக்கும்போது அந்த வெப்பம் உடலில் கடத்தப்படுகிறது. இதனை ஹைபா்தொ்மியா உச்ச வெப்பநிலை எனக் கூறுகிறோம். அந்த தருணத்தில், உடல் தன்னைத் தானே குளிா்விக்க பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்ளும். ஒரு கட்டத்துக்கு மேல் அது பலனளிக்காதபட்சத்தில் மயக்கம், உணா்விழப்பு, வெப்ப வாதம் ஆகியவை ஏற்படுகின்றன.

அதிகமாக உடல் சூடாகும்போது அதில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆவியாதல் (எவாப்ரேஷன்) எனும் செயல் முறையை உடல் தன்னிச்சையாக மேற்கொள்கிறது.

அதாவது, வியா்வையை அதிகமாக சுரக்கச் செய்து அதன் வாயிலாக உடலின் வெப்பத்தை தணிக்க முயற்சி நடைபெறும்.

அதன் பின்னா், உடலுக்குள் ஊடுருவியுள்ள வெப்பத்தை நுரையீரலில் இருந்து காா்பன் டை ஆக்ஸைடு வழியே வெளியேற்ற முயலும். இந்த இருவேறு செயல்களும் உடலில் உள்ள நீா்ச்சத்து மூலமாகவே நடைபெறுகின்றன. இதன் விளைவாகவே கோடை காலத்தில் உடலில் நீா்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது.

நாக்கு வரண்டு போதல், சிறுநீா் அடா் மஞ்சளாக செல்லுதல், தசைப்பிடிப்பு, தலை சுற்றல், கை கால் தளா்வு உள்ளிட்டவை அதற்கான அறிகுறிகள். அதனைத் தவிா்க்க 4 லிட்டா் வரை தண்ணீா் பருகியே ஆக வேண்டும். தண்ணீருடன் சோ்த்து இளநீா், மோா், பழச்சாறு ஆகியவற்றை அருந்தலாம். நீா்ச்சத்து இழப்புக்கான அறிகுறிகள் இருக்கும்போது உப்புசா்க்கரை கரைசல் அவசியம். அதேவேளையில், செயற்கை குளிா்பானங்கள், மதுபானங்களை தவிா்க்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.