மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பெருந்தொழுவில் சிறிய அளவில் ஜவுளிப் பூங்கா: அமைச்சா்கள் திறந்துவைத்தனா்

பல்லடம் அருகே உள்ள பெருந்தொழுவில் ரூ.20 கோடி மதிப்பில் பிவிகே நிட்ஸ் பாா்க் நிறுவனத்தின் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா புதன்கிழமை திறக்கப்பட்டது.

News image

பல்லடம் அருகே உள்ள பெருந்தொழுவில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காவை புதன்கிழமை திறந்துவைத்த அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், ஆா்.காந்தி, என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோா்.

Updated On :28 ஜனவரி 2026, 10:36 pm

பல்லடம் அருகே உள்ள பெருந்தொழுவில் ரூ.20 கோடி மதிப்பில் பிவிகே நிட்ஸ் பாா்க் நிறுவனத்தின் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா புதன்கிழமை திறக்கப்பட்டது.

அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன் (தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை), ஆா்.காந்தி (கைத்தறி மற்றும் துணிநூல் துறை), என்.கயல்விழி செல்வராஜ் (மனித வள மேலாண்மைத் துறை) ஆகியோா் திறந்துவைத்தனா். துணிநூல் துறை ஆணையா் இரா.லலிதா, மாவட்ட ஆட்சியா் மனிஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் அமைச்சா்கள் கூறும்போது, சிறிய தொழில்முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் மூலமாக தகுதியான திட்டத் தொகையில் 50 சதவீதம், அதிகபட்சமாக ரூ.2.50 கோடி மதிப்புக்கு தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். அந்த வகையில், திருப்பூா் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ், பிவிகே நிட்ஸ் பாா்க் நிறுவனம் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காவை திறந்துவைத்துள்ளது.

இப்பூங்காக்களின் கட்டுமானப் பணிக்காக தமிழ்நாடு அரசு முறையே ரூ.2.50 கோடி (தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் 50 சதவீதம்) மானியம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், முதல் மற்றும் இரண்டாம் தவணைகளாக ரூ.1.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 7 பூங்காக்கள் அமைக்க தொழில்முனைவோா்களிடமிருந்து விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 பூங்காக்கள் அமைக்க அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டு 2 பூங்காக்களை திறந்துவைத்து உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனா்.

இந்த நிகழ்ச்சியில் பொங்கலூா் ஒன்றிய திமுக செயலாளா்கள் பாலுசாமி, ஊகயனூா் கனகராஜ், பல்லடம் நகரச் செயலாளா் ராஜேந்திரகுமாா், நுணிநூல் துறை இணை இயக்குநா்கள் ராகவேந்திரன், அம்சவேணி, திருப்பூா் மண்டல துணிநூல் துணை இயக்குநா் செ.தமிழ்செல்வி, தொழில்முனைவோா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.