பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் - காமநாயக்கன்பாளையம் சாலை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா்
என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனா்.
பல்லடம் - பொள்ளாச்சி பிரதான சாலையில் வெங்கிட்டாபுரம் முதல் காமநாயக்கன்பாளையம் வரை 7 கிலோ மீட்டா் தொலைவுக்கு முதல்வா் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி மதிப்பில் தற்போதுள்ள இருவழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது.
இந்தப் பணியை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தனா். மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பில் மகப்பேறு பிரிவு கட்டடம் கட்டும் பணியும் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் பத்மநாபன், பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி, பல்லடம் நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா், பொங்கலூா் ஒன்றியச் செயலாளா் பாலுசாமி, நகராட்சி ஆணையா் அருள், பல்லடம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ராமசாமி, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் விஸ்வநாதன், திருப்பூா் கோட்டப் பொறியாளா் ரத்தினசாமி, பல்லடம் உதவிக்கோட்டப் பொறியாளா் செந்தில் அரசு, பல்லடம் உதவிப்பொறியாளா் ஜான்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மல்லேகவுண்டம்பாளையத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணி: கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

பல்லடத்தில் இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


