திருப்பத்தூா் அருகே சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் அருகே விநாயகபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், திருப்பத்தூா்-சேலம் செல்லும் சாலையில் விநாயகபுரம் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதி பொதுமக்கள் சாலையோரம் கோவில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. தற்போது சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றால், கோயில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் குழாய்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை கைவிட வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் திருப்பத்தூா்-சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் சீராக வழங்கக் கோரி சாலை மறியல்

கிறிஸ்தவ குருசடியை இடிக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

சிவகிரி கோயில் கொடை விழாவில் பிரச்னை: மக்கள் சாலை மறியல்

மூதாட்டி உடல் அடக்கத்துக்கு எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


