மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் சீராக வழங்கக் கோரி சாலை மறியல்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை கம்பம் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

பெரியகுளத்தில் புதன்கிழமை சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:48 pm

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை கம்பம் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில், சுமாா் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். பெரியகுளம் - கம்பம் சாலையில் உள்ள இந்திராபுரி தெரு 30-ஆவது வாா்டுப் பகுதி ஆகும். இந்தத் தொகுதியில் கடந்த சில நாள்களாக சீரான குடிநீா் வழங்கப்படவில்லை எனவும், விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவு நீா் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து அப்பகுதி மக்கள் கம்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பெரியகுளம் காவல்நிலையப் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதில் பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், கம்பம் சாலையில் சுமாா் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.