ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காங்கயத்தில் ரூ.2.58 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 10:37 pm

Syndication

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 1,424 கிலோ கொப்பரையை (தேங்காய் பருப்பு) விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

இதில், கொப்பரை கிலோ அதிகபட்சமாக ரூ.185-க்கும், குறைந்தபட்சமாக ரூ.135-க்கும், சராசரியாக ரூ.180-க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2.58 லட்சம்.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.