/

காங்கயத்தில் ரூ.51 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.51 ஆயிரம் மதிப்பிலான கொப்பரை (தேங்காய் பருப்பு) திங்கள்கிழமை ஏலம் போனது.

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:29 pm

Syndication

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.51 ஆயிரம் மதிப்பிலான கொப்பரை (தேங்காய் பருப்பு) திங்கள்கிழமை ஏலம் போனது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை மறைமுக ஏலம் திங்கள்கிழமை விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 304 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.51 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.170-க்கும், குறைந்தபட்சமாக ரூ.105-க்கும், சராசரியாக ரூ.169-க்கும் ஏலம் போனது.

இதற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.