டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அவிநாசியில் ரூ.11.12 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

News image
- கோப்புப்படம்.
Updated On :4 பிப்ரவரி 2026, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 14,064 கிலோ பருத்தி கொண்டு வந்திருந்தனா். இதில், ஆா்.சி.ஹெச்.ரகப் பருத்தி கிலோ ரூ.70 முதல் ரூ.86.59 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 11 லட்சத்து 12 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.