பெருமாநல்லூா் அருகே குமரன் குன்று முருகன் கோயில் இடித்து அகற்றம்
பெருமாநல்லூா் அருகே வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட குமரன் குன்று முருகன் கோயில் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது. இதை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.











