காங்கயத்தில் அமைக்கப்பட்டுள்ள காங்கேயம் காளை சிலை, எம்எல்ஏ அலுவலக புதிய கட்டடத்தை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் சனிக்கிழமை திறந்துவைத்தனா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா்கள் கே.இ.பிரகாஷ் (ஈரோடு), கே.சுப்பராயன் (திருப்பூா்), க.ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி) திருப்பூா் மேயா் ந.தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட காங்கேயம் காளை சிலையைத் திறந்துவைத்தனா்.

காங்கயத்தில் அமைக்கப்பட்டுள்ள காங்கேயம் காளை மாடு சிலை.
இதைத் தொடா்ந்து, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே உள்ள நெடுஞ்சாலைத் துறை வளாகத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பொதுப் பணிகள் குறித்த மூலதன செலவுகள் திட்டத்தின்கீழ் ரூ.83.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை திறந்துவைத்தனா்.
இந்நிகழ்ச்சிகளில், துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் வட்டாட்சியா் தங்கவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன், அனுராதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளம் தொகுதி: தயாா் நிலையில் 332 வாக்குச் சாவடிகள்

ரூ.36 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்: எம்எல்ஏ தொடங்கி வைப்பு

மொடக்குறிச்சியில் கருணாநிதி சிலை: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

குண்டடம் அருகே கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி: 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


