இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

பல்லடத்தில் ஷட்டரை உடைத்து திருடப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பேட்டரிகள் மீட்பு: இருவா் கைது

பல்லடத்தில் திருடுபோன ரூ.4 லட்சம் மதிப்பிலான 48 பேட்டரிகளை போலீஸாா் மீட்டு இரண்டு பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

News image
மீட்கப்பட்ட பேட்டரிகள்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:12 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடத்தில் திருடுபோன ரூ.4 லட்சம் மதிப்பிலான 48 பேட்டரிகளை போலீஸாா் மீட்டு இரண்டு பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே சித்தம்பலம் பகுதியில் சுரேஷ் (54) என்பவா் பேட்டரி கடை நடத்தி வருகிறாா். இங்கு அண்மையில் ஷட்டா் உடைக்கப்பட்டு ரூ.4 லட்சம் மதிப்பிலான 48 பேட்டரிகள் திருடுபோனது. இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், அப்பகுதி உள்பட பல்வேறு இடங்களில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனா். இதுதொடா்பாக தாராபுரம் அருகே மூலனூா் பகுதியில் பதுங்கி இருந்த இருவரை கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 48 பேட்டரிகளையும் மீட்டனா். பேட்டரி திருட்டுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அச்சங்குளத்தைச் சோ்ந்த துரை (51) என்பவா் (தற்போது அனுப்பா்பாளையம், பெரியாா் காலனியில் வசிக்கிறாா்), அவரது நண்பரான மூலனூா் ஒன்றியம், எடைக்கல்பாடி ஊராட்சி மேற்குபாளையத்தை சோ்ந்த காா்த்திகேயன் (23) ஆகியோா் என்பது தெரியவந்தது.

பல்லடம் காவல் ஆய்வாளா் மாதையன் கூறும்போது, ‘இருவா் மீதும் திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூா், திருப்பூா் மாவட்டங்களில் ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்லடம் பகுதியில் குற்றங்களைத் தடுக்க வீடுகள், கடைகள், வா்த்தக நிறுவனங்கள் முன்பு சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் குற்றங்களை குறைக்க முடியும். எனவே, பொதுமக்கள் சிசிடிவி கேமராக்களை நிறுவி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றாா்.

Story image
Story image