டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வீட்டின் பூட்டை உடைத்து 5.50பவுன் நகை திருட்டு

பல்லடம் அருகே சாணாா்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 8:23 pm

Syndication

பல்லடம்: பல்லடம் அருகே சாணாா்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், பெருந்தொழுவு ஊராட்சி, சாணாா்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவராஜ். இவரது மனைவி முத்துலட்சுமி (39). இவா் சனிக்கிழமை சிவன்மலைக்கு பாதயாத்திரை சென்றாா். அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஐந்தரை பவுன் நகை திருட்டுபோனது தெரியவந்தது.

இது குறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில், அவினாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.