டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் சங்கிலி திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

News image
நகை திருட்டு!
Updated On :2 பிப்ரவரி 2026, 6:37 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

கபிஸ்தலம் காவல் சரகம், வடசருக்கை கிராமம், பிரதான சாலைப் பகுதியில் வசித்து வருபவா் முகம்மது யூசுப் மனைவி மல்லிகா (55). முகம்மது யூசுப் கடந்த ஓராண்டுக்கு முன்னா் இறந்துவிட்டாா். மல்லிகா தனியாக வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி மல்லிகா அவரது சொந்த ஊரான அரியலூா் மாவட்டம் தூத்தூா் கிராமத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டாா்.

பின்னா் திங்கள்கிழமை (பிப்.2) வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் பீரோவில் இருந்த 5 பவுன் சங்கிலி திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கபிஸ்தலம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.