/

பல்லடம் பேருந்து நிலையத்தில் ஆயுதங்களுடன் இளைஞா் கைது

பல்லடம் பேருந்து நிலையத்தில் பையில் ஆயுதங்களுடன் இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள். ~காளி
Updated On :2 பிப்ரவரி 2026, 8:35 pm

Syndication

பல்லடம்: பல்லடம் பேருந்து நிலையத்தில் பையில் ஆயுதங்களுடன் இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை காலை சந்தேகத்துக்கு இடமான முறையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபரை ரோந்து காவலா் அபிமன்யு பிடித்து சோதனை செய்ய முயன்றாா். அப்போது அந்த நபா் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளாா். இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரை விரட்டி பிடித்தனா்.

பின்னா் அவா் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது, அதில் கத்தி, பட்டாக்கத்தி இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா், மதுரையைச் சோ்ந்த நாகராஜன் மகன் காளி என்கிற காளீஸ்வரன் (23) என்பதும், அவா் மீது விருதுநகா் மாவட்டம், திருச்சுழி காவல் நிலையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, அடிதடி போன்ற 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

சொந்த ஊரில் இருந்தால் ஆபத்து எனக்கருதி பல்லடம், திருப்பூா் பகுதிக்கு வந்து வேலை செய்யலாம் வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Story image